skip to main |
skip to sidebar
அன்றாட பயணப்பொழுதுகளில், சாலை திருப்பத்திலோ.. நெடுஞ்சாலை ஓரங்களிலோ..
ரயில்வே மேம்பாலங்களிலோ மனிதத் திரள்கள் கூடியிருந்தால், நம் மனம் உணர்வது ஓர் மரணத்தை.
கூட்ட இடுக்குகளில் புகுந்து பிராயத்தனப் பட்டு முன்னேறி..
விபத்தால் கொடூரமாய் சிதைக்கப்பட்ட உடலை கண்டு, ஆயத்தமாய் வைத்திருக்கிற பரிதாபத்தை வெளிபடுத்துவோம்.
உடனே 'ஞானி' யாய் மாறி 'மனுசனோட வாழ்க்கையை பாத்தியா.. இன்னிக்கு இருக்கிறோம்...'
என்கிற ரீதியான தத்துவ உபதேசத்தைக் கைகொள்கிறோம்.
ஆழ்ந்து பார்த்தால் அந்த வருத்தம் மெய்யில்லை.
"நல்ல வேளை அது நாம் இல்லை" என இறந்தவறோடு ஒப்பிட்டு, வக்கிரமாய் உள் மனம் திருப்தியடையும்..
"ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் வரும்பா.." என்று அடிக்கடி தமது மெல்லிய மனதை பிராச்சாரம் செய்யும்
ஜீவ ராசிகள் தான் கூட்டத்தின் முன் வரிசையில் நின்றிருப்பர். விபத்தோ! கொலையோ! தற்கொலையோ, எங்கு கற்பனைக்கு எட்டாத வகையில் மனித உடல்
சிதைக்கப்பட்டு மரணத்தை எய்தியிருக்கிறதோ அதை பார்த்தேயாக வேண்டும் என்கிற "வேடிக்கை ருசி' எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
அதை மற்றவர்களோடு பகிரும் போது "நீயெல்லாம் பாத்தே.. அந்த இடத்திலேயே அட்டாக்கிலே போயிருப்பே."
என்று திடமனதை பதிவு செய்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாகவே இந்த மரணம் அமைகிறது.
இது போன்ற மரணத்தின் பின்னனியை கதையாக கையாண்ட தமிழ் படங்கள் பெரும்பான்மை வெற்றியடைந்திருக்கின்றன.
அதே வரிசையில் இப்போது வந்துள்ள படம் "மைனா" பழிவாங்களோ, எதிரிக்கு விடும் சவால்களோ எதுவும் இல்லாமல் வெகு இயல்பாய், வெகு அழகாய்,
மிக நேர்த்தியான கலையம்சத்தோடு ஒரு படத்தைத் தந்திருக்கிறார் பிரபு சாலமான்.
சமீபத்திய தமிழ் திரைபட சூழலில், எனது பத்து வருட கனவு, இந்திய திரை சரித்திரத்தில் இது வரலாற்று
பதிவு என்று சகல ஊடகஙளிலும் நாம் மனநோய் மருத்துவரை நாடும் அளவுக்கு நம் இயல்பை சிதைவு செய்த படஙளிலிருந்து ஓர் ஆசுவாசம் மைனா.
தொழில் நுட்பஙளை தடவி, உருவி படம் பண்ணும் தமிழ் சினிமா ஜீவிகளின் பாணியை புறந்தள்ளி எளிமையான வாழ்வுநகர்வுகளை
கோர்த்து வலிமையான கதையனுபவத்தை தந்திருக்கும் இயக்குனர் பிரபுசாலமனுக்கு ஓர் "ஹானஸ்ட் சல்யுட்".
சரியான அத்யாவசிய வசதிகளற்ற மலைவாழ் கிராம மக்களின் சராசரியான குறைபாடுகளுடன் தீபாவளியின் துவங்கு முனைப்புகளுடனும் படம்
துவங்குகிறது [வன்முறை பின்னணி கொண்ட குடும்பத்தின் மகளாய்]
சிறையதிகாரியின் மனைவி சுதா தலை தீபவாளிக்கு தன் பிறந்த வீட்டிற்க்கு தயாராகுகிறாள்.
சிறையதிகாரி - பாஸ்கருக்கு - சிறையில் ஓர் நிகழ்ச்சியிருப்பதாய் சொல்லி, முடிந்து கிளம்பலாம் என கூறி சிறைக்கு புறப்படுகிறார்.
அங்கு சுருளி என்கிற கைதி தப்பித்து விட.. அவனை பிடித்து ஒப்படைக்கும் பொருப்பில் சிக்கிக் கொள்கிறார்.
அதன் பொருட்டு, அவரும் இன்னொரு காவலரும் சுருளியை தேடி அவன் ஊருக்கு செல்கின்றனர்.
அவனை பிடித்தும் விடுகிறார். சுருளியினுடன் அவன் காதலி மைனாவும் வர நேர்கிறது. வழிமாறுதல், இடையே தப்பித்தல் மீண்டும் பிடித்தல் ..
பிறகு நேரும் பஸ் விபத்து.. என கதை கிளைமாக்ஸை அடைகிறது.
மனிதனில் சாதரணன் (Normal) அசாதாரணன் (Up Normal) என்கிற தகுதி,நிலையான ஒன்றில்லை
உன்னதமான மனநிலையும், உன்மத்த மனநிலையும் அவன் எதிர்கொள்கிற பிரச்சனையின்
பொருட்டும், சூழல்சார்ந்துமே தொழில்படுகிறது.
கல்வியறிவு, தகுதி, அவன் குறித்த சமூக மதிப்பீடுகள் இவைகளை அடியொத்து அவனுடைய பாவனையான வாழ்க்கை முறை,
கழுத்து நெறிபடும் ஒரு முடிச்சில் உடைந்து, தெறித்து அவனை இயல்பானவாக வெளிப்படுத்துகிறது.
மைனாவை இன்னொருவனுக்கு மணம் செய்து வைக்க முயலும், மைனாவின் தாயை கல்லைப் போட்டுக் கொலை
செய்ய முயலும் நாயகன் சுருளி (விதார்த் From கூத்துப்பட்டறை)
பேருந்து விபத்தில் காவலர் இருவரையும் காப்பாற்றி வெள்ளந்தியாய் "ஏதவது காயமா சார்? வலிக்குதா?"
என பரிதவிப்பதும்..
சிறையதிகாரி, உணவகத்தில் "நீ செஞ்ச காரியத்துக்கு கஞ்சா கேஸில் தள்ளி ஆறுமாசம் உன்னை அடி வெளுத்துடறேன்" என்று மிரட்டுவதும், இன்னொரு
இடத்தில் 'Encounter' பண்ணிடுவேன் என கொதிப்பதும்..
இறுதியில் "நானே ஜாமின் எடுத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்" என உறுதியளிப்பதும் மனித உளவியல் சார்ந்த சிறப்பான காட்சியமைப்பு.
அத்யாவசிய பணியின் துறைகளில் பணிபுரிவோர்க்கு ஏற்படும்
மன அழுத்தம், தனிபட்ட தங்கள் வாழ்வியல் நிகழ்ச்சிகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ,
அநேகமாக ஆழமாய் பதிவு செய்த தமிழ்படம் இதுவாகத்தான் இருக்கும்.
காவல்துறையின் அலுவல் சார்ந்த நிர்பந்ஙளையும், அதன் எதிர்வினைகளையும் துல்லியமாக
காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
அனைத்து பாத்திரஙளும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாய், தமிழ் படவுலகிற்கு ஓர் அருமையான குணசித்திர நடிகர் தம்பி ராமையா கிடைத்துள்ளார் மைனா மூலமாக.
நாயகி பரீட்சைக்கு படிக்கும் சமயத்தில் மின் தடை ஏற்படும்போது நாயகன் "மின் மினி" பூச்சிகளை பிடித்து
வருவதாகட்டும்...
வழிமாறி மலையில் அலைவதாகட்டும்
பேருந்து விபத்தாகட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவு அசத்தியிருக்கிறது.
இமான் தேறியிருக்கிறார் இசையில்.
யதார்த்த சினிமா பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து
தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்க..
நேர்மையுடனும்
பொருப்புடனும் உழைத்திருக்கிறது மைனா படக்குழு.
வாழ்த்துக்கள்.!
Thursday, 18 November 2010
மைனா

இதழ்கள்
- கட்டுரைகள் (5)
- சினிமா பார்வை (1)
- தெருவோர குறிப்புகள் (3)