2010 சனவரி மாதத்தில் ஒருநாள்.
சல்லிக்காசுகூட இல்லாமல் 'சில்லியாய்' இருந்த ஓர் காலைப்போழுது.
ராயபுரத்திற்கு சென்றால் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேற்றி விடலாம் என நம்பிக்கை.
நண்பன் - லாரன்ஸிடம் - ஏதோ ஒன்றைச் சொல்லி இருபது ரூபாய் பெற்று பஸ் ஏறினேன்.
நான் சென்று அமர்ந்த, அந்த அமர்வு சுகப்படவில்லை கடைக்காரன்(டையிங் ஏஜென்ட்) என்னை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது தொலைபேசியில் மும்முரமாயிருந்தான்.
எனக்கு குடலை தின்னும் பசி. ஒரு தேநீர் அருந்தினால் கூட நெற்குன்றம் திரும்பி வர முடியாத பண நெருக்கடி.
கடைக்காரனோ, வேலையாட்களுக்கு என்ன வகையான உணவு வேண்டும் என்று கேட்டு, அவர்களுக்குள் செல்லமாய் வாதிட்டு, தீர்மானம் நிறைவேறி ஒருவழியாய் அவர்கள் தருவித்த உணவு பொட்டலங்களோடு "வெயிட் பண்ணுங" - என்று சொல்லி மறைந்தார். பேச்சுக்குக் கூட சாப்பிட அழைக்கவில்லை.
வாழ வேண்டுமா என்று நான் தீவிரமாய் யோசித்த விநாடி அது.
கலீல் ஜீப்ரானின் வார்த்தைகளிலிருந்து பாரிமுனை பேருந்து நிலையத்தில் சற்றே காலை விலக்கினால் பெண்குறி தெரிந்து விடும் நிலையில் அமர்ந்திருந்த பெண்வரை ஞாபகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் உணவு நேரத்தை புர்த்தி செய்து கொண்டிருந்தேன்.
கடைக்காரர் திரும்ப வந்து திருவாய் மலர்ந்தார்.
"ஒரு பீஸ் கூட ஓடலீண்ணே! சீசனும் டல்லு. மய(மழை)வேற. நீங்களாவது தெரிஞ்ச பார்ட்டியிருந்தா வித்து குடுன்னு கேக்கலாம்ன்னு இருந்தா, நீங்களே வந்து நிக்கறீங்க. கோச்சுக்காதீங்கண்ணே, காசு கொடச்சதும் நாணே போன் பண்றேன்."
இலக்கியம் சமைத்து..
இலக்கணம் உடைத்து..
இயங்கிய நிமிஷங்களில்..
ஈயப் பாத்திரம் ஒன்றேந்தி
ஈ என நின்றிருந்தால்..
உண்டி வந்திருக்கும். இப்படி
ஊ... நிண்றிருக்க வேணாமே...!
- என்கிற அகர வரிசையில் விரக்தி கவிதை ஒன்றை மனதில் எழுதியவாறு பாரிமுனை வந்து பேருந்தில் அமர்ந்தேன். சன்னலோரம்.
சில விநாடிகளில் நான் கவிதியில் நினைத்த ஈயப்பாத்திரம் நிஜமாய் என் கண்முன்னே..
கீழே ஓர் அழுக்குச் சிறுவன். கிழிசலான உடையோடும் நான் எதையாவது தருவேன் என்கிற கிழியாத நம்மிக்கையோடும்...
முன் சீட்டில் ஒரு மூன்று வயது சிறுவன். அவன் பார்வை எதிர்பக்கத்தில் லயித்திருக்க.. அவன் பக்கத்தில் பாலிதீன் பையில் திண்பண்டங்கள். தயங்காமல் திருடத் துணிந்து கைவிட்டேன் 'குர் குரே'வோ எதுவோ?
கைக்கு கிடத்ததை வேகமாய் எடுத்து அழுக்குச் சிறுவனின் தட்டில் போட்டு.."வேகமாய் போய்டு" என்றேன். அவனுன் அப்படியே..
சிறிய படபடப்பிற்கு பின் ஆசுவாசம்.
இப்போழுது எதிர்சீட்டில் பையனின் அழுகை "மம்மி குர்குரே...மம்மி குர்குரே".
நான் மோசமாய் மொழிபெயர்க்கத் துவங்கினேன்.
"ஙோத்தா குர்குரே..ஙோத்தா குர்குரே".
அழுக்குச் சிறுவனிடம் என்னைப் பொருத்தி அவன் இன்பமாய் உண்ணுவதை நான் உண்ணுவதாய் கற்பனை செய்யத் துவங்கினேன். இன்னொன்றையும்..'லாரன்ஸிடம் என்னச் சொல்லி ஒரு அம்பது ரூபாய் வாங்குவது?'
skip to main |
skip to sidebar
இதழ்கள்
- கட்டுரைகள் (5)
- சினிமா பார்வை (1)
- தெருவோர குறிப்புகள் (3)

