நம் தமிழகத்தில் நிகழும் பாலியல் குற்றங்களையும், குற்றவாளிகளையும் சமூகம் அவர்கள் மேல் கொள்ளும் கோபத்தையும் தண்டனை என்கிற அளவுகோலையும் தவிர்த்து ஆழ்ந்து பார்த்தால் ஓர் அனுதாபமே ஏற்படுகிறது.
நம் கலாச்சாரமும், பண்பாடும் எவ்வளவு பாலியல் வறுமையை ஏற்படுத்தியிருக்கிறது என்று வருத்தமாயுள்ளது.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதோ, கரிசனைக்குட்பட்டு பார்க்கப் படுவதோ முழுமுற்றாக கூடாது. கூடுவதும் இல்லை.
அதை நானிங்கு ஆதரிக்கவில்லை. ஆயின் அற்பது விழுக்காடு பாலியல் குற்றங்கள் பரிதாபத்திற்க்கு ரியது. அரசு அணுகினால் கலையப்படக் கூடியது. விசால மனதோடு பதவி சுகத்துக்கு மாரடித்துக் கொண்டு, அரசியல் செய்யும் மலட்டு அரசியல்வாதிகளால் இதை யோசிக்ககூட இயலாது.
என் நண்பர் இசைக்கலைஞர். தன் மத்திய வயதுவரை நிரம்ப..ஆரோக்கியமான கண் பார்வை திறனுடன் இருந்தவர்.
பெயர் நுழையாத, மருத்துவ விஞ்ஞானம் குறிப்பிடுகிற வியாதியில் தன் பார்வை திறனை கொஞ்சம்...கொஞ்சமாக இழந்து வந்தார்.
அவருக்கு தெளிவாக தெரிந்துவிட்டது, வெகு விரைவில் முழுப்பார்வையற்றவனாக மாறப்போகிறோம் என்று.
அவர் இறுதித் தருவாயில் தன் பார்வையால் நிரப்பிக் கொண்டது...
இயற்கை அழகுகளையல்ல...!
தன் ரத்த சொந்தங்களின் முகங்களையல்ல...!
தான் நேசித்த ஆர்மோனியத்தின் கட்டைகளையல்ல...!
மனிதன் தன் இயலாமைக் கட்டத்தில் பலஹீனம் பட்டு... ஏதோவோர் நம்பிக்கையில் தேடி ஒடுகிற கடவுள் என்று சொல்லிக் கொள்ளப்படுகிற வெறும் விக்ரகங்களையல்ல !
பின் ?
மிச்சமிருக்கும் பார்வையினால், தொலைக்காட்சிக்கு வெகு அருகிலமர்ந்து உடலுறவு படங்களை நாளெல்லாம் பார்த்தாராம்.
கண்ணகி என்று சொல்லப்படுகிற பெண்ணியப் பார்வையற்ற அந்த பெண் பாத்திரத்தை வைத்துக்குகொண்டு பராம்பரியம், பண்பாடு என்றுச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்த இரு தரப்பு கட்சி தலைவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது இதுதான்.
போங்கடா... உங்க கலாசாரமும் பண்பாட்டு மயிரும்.
skip to main |
skip to sidebar
இதழ்கள்
- கட்டுரைகள் (5)
- சினிமா பார்வை (1)
- தெருவோர குறிப்புகள் (3)

