அதுதான் அவர்களுடைய பதவிக்கும், தகுதிக்கும் அழகுடையதாக இருக்கும்.
அது விடுத்து, வார்த்தை ஜாலத்திற்காகவும்.. தான் சொற்களின் மேல் கொண்டுள்ள ஆளுமையை வெளிச்சம் படுத்துவதற்கும் கைகொண்டால்... அது மிகவும் அருவ்ருப்பான ஒன்றாகிவிடும்.
இப்படி அருவ்ருப்பை தனது அடையாளமாக்கிக் கொள்ளும் ஆசை முதல்வர்.கருணாநிதிக்கு மிகவும் இருக்கிறது போலும்.
ஈழத்தில் நம் ரத்த சொந்தங்கள் கொத்து கொத்தாய் உடல் சிதறி சாகும் போர் மூண்ட மத்திய நாட்களில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்... ஒரு நிருபர் கேட்கிறார். ஏதாவது விடிவு அந்த தமிழர்களுக்கு கிடைக்காதா? என்கிற ஆதங்கத்தில். அவரின் கேள்வி இதுதான்,
"ஈழ விஷயத்தில் நாம் அடுத்து செய்யவேண்டியது என்ன?" - 'தமிழின தலைவர்' என்று சொல்லிக்கொள்ளும் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா?
"அடுத்தது என்ன? எல்லோரும் டீ சாப்பிடறதுதான்"-
ஆஹா...
என்ன ஓர் இனப்பற்று!
என்ன ஓர் தமிழ்பாசம்.
ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யக் கோரி அரசியல் கட்சிகள் முதல் திரைப்படத்துறையினர் வரை அனைத்து தமிழ் மக்களும் மனித சங்கிலிப் போராட்டத்தை கொட்டும் மழையில் நனைந்தவாறு நடத்தினர்.
அதை பார்வையிட காரில் வந்தபடியே பங்கேற்ற அனைவருக்கும் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி.
அவருடைய கையசைப்பைப் பெற்றவர்களில் இயக்குநர்கள் அமீரும் சீமானும் அடக்கம்.
மறுநாள் அமீரும், சீமானும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
"உன் சீரிளமை திறன் வியந்து, செயல் மறந்து" என தமிழகமே கருணாநிதியை வாழ்த்தியது.
பிறகு, உண்ணாவிரத நாடகப் பந்தல்.
நாடகத்தின் இறுதிக்காட்சியில், "கருணாநிதியின் உண்ணாவிரதம் கண்டு சிங்கள அரசு பணிந்து விட்டதாகவும்.. போர் நிறுத்தம் செய்துவிட்டது" என்ற, கருணாநிதியின் வசனத்துடன் நாடகம் நிறைவுற்றது.
இந்த உண்ணாவிரத நாடகம் முடிந்த அன்றே நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்களவனின் வெறித்தாக்குதலுக்கு பலியானதாக செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.
அச் செய்தியை அடியொட்டி மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது.
கொஞ்சமும் பதட்டப்படாது நமது முத்தமிழ் காவலர் விளம்பியது இதுவே! "மழைவிட்டும்.. தூவானம் விடவில்லை!".
| நன்றி : தினமலர் நாளிதழ் |
உங்கள் குடும்ப பாசத்திற்காகவும், பதவி விசுவாசத்திற்காகவும் ஓர் புரட்சி இயக்கமும், தமிழினமும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.
தமிழினம் அழிந்த வேதனையை மறப்பதற்காக பாவம் நீங்களும் பல்வேறு திரைவிழாக்களுக்கும், முதன்மைக் கட்சிகளுக்கும் சென்று மனதை ஒருவாறு ஆற்றியிருப்பீர்கள்.
நமது தமிழின வியாதியான "அம்னீசியா"வால் நாங்களும் கொஞ்சம் மறந்திருந்த வேளையில், நேற்று திடீரென்று உங்கள் கிண்டல் கலை(ணை)யை எய்து விட்டீர்கள்.
கேள்வி : வெங்காய விலையை குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்கள் ?
பதில் : ஆங்.. பெரியார்ட்ட போயி கேளு...
தமிழினம் அழிந்த வேதனையை மறப்பதற்காக பாவம் நீங்களும் பல்வேறு திரைவிழாக்களுக்கும், முதன்மைக் கட்சிகளுக்கும் சென்று மனதை ஒருவாறு ஆற்றியிருப்பீர்கள்.
நமது தமிழின வியாதியான "அம்னீசியா"வால் நாங்களும் கொஞ்சம் மறந்திருந்த வேளையில், நேற்று திடீரென்று உங்கள் கிண்டல் கலை(ணை)யை எய்து விட்டீர்கள்.
கேள்வி : வெங்காய விலையை குறைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்கள் ?
பதில் : ஆங்.. பெரியார்ட்ட போயி கேளு...
ஆம் கட்டாயம் எங்கள் தந்தை பெரியாரிட்ம் கேட்டேதான் ஆகவேண்டும்.
வெங்காய விலையைப் பற்றியல்ல. உங்களைப் பற்றி.
எங்கள் பகுத்தறிவு ஆசானே!, தங்கள் மகன் சிறிய வயதிலேயே இறந்து கிடக்கிறான், உங்கள் இல்லம் முழுவதும் துயரக் கடல். புத்திர சோகம் உள்ளுக்கிடந்தாலும் நீங்கள் சொன்னது என்ன ?வெங்காய விலையைப் பற்றியல்ல. உங்களைப் பற்றி.
"நல்ல வேளை செத்துப் போயிட்டான். இல்லேன்னா நாளைக்கு வாரிசு.. அது இதுன்னு வந்து ரொம்ப பிரச்சனையா போயிருக்கும்" - தன் மகன் இறப்பைக் கூட, தனக்கு பின்னால் வாரிசு உரிமையில் தலைவனாகிவிட்டால் தொண்டர்களின் ஜனநாயக உரிமைக்கு பங்கம் ஏற்பட்டுபோகுமோ - என்கிற ரீதியில் சிந்தித்த நீங்களெங்கே?
தன் மகன், மகள், பேரன் இத்யாதிகளுக்காக ஓர் இனத்தையே காவு கொடுத்த தமிழின காவலர் கருணாநிதி எங்கே?
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்க்கதரிசி என்று உலகத்தால் கொண்டாடப்பட்ட நீங்கள்... இவரை எப்படி அடையாளம் காணப்படாமல் விட்டு விட்டீர்?
என் பெரியாரே !
நாங்கள் யாரிடம் கேட்கமுடியும்?
உங்களிடம்தான் கேட்கமுடியும்!..

