கடந்த சில தினங்களாக நாளிதழ்களில் முக்கியம் பெரும் பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது "மன் மதன் அம்பு" பாடல் விஷயம்.
இக்கலாச்சாரக் காவலர்களின் சில்மிஷம் பெங்களூரு 'பப்'பில் பெண்களை மிருகத்தனமாகத் தாக்கியதும்..
காதலர் தினத்தன்று வணிக வளாகங்களுக்குள் நுழைந்து பொருட்சேதம் ஏற்படுத்துவதும்.. காதலர்களை அடித்து துவைப்பதும் என்று இவர்களின் நீட்சி தமிழகத்தில் திரை ஊடகத்தையும் மிரட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
[பாகிஸ்தானின் உளவுப்பிரிவும், அமெரிக்க நாட்டின் உளவுப்பிரிவும் இந்துக்களிடமும் - முஸ்லிம்(இந்திய)களிடமும் பிரிவினை செய்ய எவ்வளவோ முயன்றும். பல கோடிகளை வாரியிறைத்தும் முடியாமல் தோற்றுப்போனார்கள். அதை பத்து பைசா செலவின்றி செய்து வைத்த புண்ணியவான்கள்தானே நீங்கள்!].
"கண்ணோடு கண்ணை கலந்தால்" பாடல் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் அவமானப்படுத்துவதாக வழக்குப் பதிவு செய்து கமல், தயாரிப்பாளர் உட்பட நால்வர்க்கும் வக்கீல் நோட்டீஸ் வேறு அனுப்பியுள்ளது இந்து முன்னணி.
இப்பாடலினால் இந்துமதமும், இந்துக்கள் மனமும் புண்பட்டு விட்டதாம்.
ஏன் மார்கழி மாத பஜனையிலும், கதாகாலேட்சபத்திலும்
'கண்ணன் கோகுலத்தில், குளிக்கும் பெண்களின் ஆடைகளை களவு செய்து, அவர்களின் நிர்வாணத்தை ரசிப்பதை' வாயில் ஒழுகும் எச்சிலைக்கூட துடைக்க மறந்து பேசி சிலாகிக்கும் போது தெரியவில்லையா? அது ஆபாசம், கயமைத்தனம் என்று!
உங்கள் ராமாயணத்தின் பாதிப்பில் தான் "பால் வண்ணம் பருவம் கண்டு" என்கிற முதலிரவுக் காட்சி பாடலை கண்ணதாசன் அவர்கள் எழுதினாரே...
அப்போதெல்லாம் வழக்கு போடாமல் வாயில் என்ன வாழைப்பழத்தை வைத்தா சுவைத்து கொண்டிருந்தீர்கள்.
தமிழ் சினிமாவில் காதல் கதை சம்பந்தப்பட்ட படத்தில்கூட 'கிளப் சாங்'(கவர்ச்சிப் பாடல்) அதிகம் சேர்க்கப்படுவதில்லை.
ஆனால்,
மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி, தொடங்கி அனைத்து பக்திபடங்களிலும் பக்தி ரசத்தை சிறிதாகவும் தடுக்கினால் வந்துவிழும் 'கிளப் சாங்'களால் காமரசத்தை பெரிதாக சொட்டவிட்டபோதெல்லாம் இந்து மதம் அழுக்காகவில்லையா?.
காதலை சேர்த்து வைக்கச் சொல்லியும், காதலியை இணங்க வைக்கவேண்டியும் இந்து கடவுள்களை மூன்றாம் தர தரகனைப்போல், தமிழ்பாடல்கள் பயன்படுத்தியதே, அப்போது தெரியவில்லையா? ஆபாசம் என்று.
உ.ம் :
1. என் கேர்ள் பிரண்ட சேத்து வையி கணேசா - வான்மதி.
2. திருப்பதி ஏழுமை வெங்கடேசா எங்க காதலுக்கு பச்சைக்கொடி காட்டு லேசா - நினைவிருக்கும் வரை
3. காலையில் எழுந்து.. காப்பிகுடித்து
தம்மு அடித்து.. தம்மு பிடித்து
சாமியே அய்யப்பா.. - சந்தோசம்.
4. கவலைப் படாதே ச்கோதரா..
கருமாரி காத்து நிப்பா காதலத்தான்
சேத்து வப்பா - காதல் கோட்டை.
கந்தஷஷ்டி கவசம், பதினெட்டு வயது இளம் மொட்டு மனது பாய் போட ஏங்குவது தனி ரகம்.
திரைப்படத்தை விடுங்கள்.
சங்கராச்சாரியார், பிரேமானந்தா, நித்யானந்தா என்று எல்லா ஆனந்தாக்களும், ஆச்சார்யர்களும் பூனூல் பூசாரிகளும் மடத்திலும், கோவில் கருவறைகளிலும் காமக் குத்தாட்டமே நடத்தியது காணொளி காட்சியாக வலம் வந்து நாடு முழுவதும் நாறியதே..
அச்சமயத்தில் சிறு முனகல்கூட உங்களிடமிருந்து வரவில்லையே ஏன்?.
பூனூல் பாசம் புடுங்கியடித்ததோ?.
உங்கள் புராணங்களில் இல்லாத ஆபாசமா "மன் மதன் அம்பு" படப் பாடலில் உள்ளது.
இங்கு ஓர் ஆணும், பெண்ணும் கலவித் தருணத்திலோ.. ஒரு மோன நிலையிலோ இருக்கையில் வேறெப்படி பேசிக் கொள்ள முடியும்?.
ஸ்வாஹ.. ஸ்வாஹ என்றுதான் பிதற்றிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ.?
அப்படி ஒர் எண்ணம் இருந்தால் காஞ்சிபுரம் பெருமாள் கோயில் பூசாரியிடம் கேட்டுத் தெளிவு கொள்ளுங்கள். விளக்கமும் விவரமான படமும் தன் கைபேசியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொடுத்தனுப்புவார்.
ஹரி என்ற ஆணும் ஹரணென்ற ஆணும் புணர்ந்து பெற்ற (ஹோமோசெக்ஸ்) செல்வன் ஐயப்பன் எல்லாம் புனிதமானவர்.
சிவனின் காமவெறி முற்றி ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்ய... உச்சக் கட்டத்தில் உறுப்பு தப்பிதமாய் உருவிக்கொள்ள அவனுடைய விந்து துளிகள் பூமியை நோக்கி விழ.. பார்வதி தன் பெண்குறியை ஆறு பாகங்களாக பிரித்து அதை தாமரையாக்கி ஸ்கந்ததை (விந்தை) ஏற்றதால் பிறந்தனை ஸ்கந்தன் அலைஸ் முருகன் என்பதெல்லாம் புனிதமானது...
இந்த பாடல் மட்டும் ஆபாசம்...
வேண்டாம். உங்களால் இந்தியா எவ்வளவோ வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தது.
ஒரு எல்லைக்குமேல் தொடர்ந்தால்... உங்கள் மொழியிலே சொல்கிறேன்,நீங்கள் எய்த பூமாரங் உங்களுக்கே திரும்பிவரும்.
நீங்கள் செய்ய வேண்டிய கடமை நிறைய இருக்கிறது. உங்கள் ஆனந்தாக்களையும், பூனூல் பூசாரிகளையும் இன்னும் பல படுக்கையறை காட்சிகளை காணொளியாக பதிவு செய்ய சொல்லுங்கள்.
ஏனெனில் எங்கள் 'மெமரி கார்டு'களில் உங்களுக்காக ஓர் இடம் நிரந்தரமாக இருக்கிறது.
மற்றபடி
ஆபாசம், மத துவேசம் என்றெல்லாம் கிளம்பினீர்கள் எனில் சிண்டு சிக்காகிவிடும் ஜாக்கிரதை !.
skip to main |
skip to sidebar
Sunday, 12 December 2010
இதழ்கள்
- கட்டுரைகள் (5)
- சினிமா பார்வை (1)
- தெருவோர குறிப்புகள் (3)

