ஓர் வெள்ளிக் கிழமை மாலை...
என் ஊரின் பரபரப்பான கடைத்தெரு..
விளக்கொளியை மீறிய பிரகாசம், தெருவோரம் கடை விரித்துள்ள வியாபாரிகளுக்கு.
[நான் எந்தக் கவலையில் ஆழ்ந்திருந்தாலும், தொழிலாளி ஒருவனின் முகச்சிரிப்பில் மனம் கனிந்து புத்துணர்வு பெற்று விடுபவன்.]
குறைவான பேரத்திலேயே வியாபாரம் படிந்த மகிழ்ச்சி அச்சிறு வியாபாரிகள் முகத்தில்.
இதைக் குழைப்பதாக சிறு கூட்டமும், பெருங்கூச்சலூமாய் ஒரு பெண்மனியின் பூக்கடை. [அவளையும்.. அவள் பின்னணியையும் நான் அறிந்தவன்] அவளின் அங்கீகரிக்கப்படாத (வைப்பாட்டன்?) கணவன் ஒருவன், "ஏன்டி போன் பன்னியும் வர்ல? எவங்கூட........ கெடந்தே? அவனது என்னவிடப் பெரிய.......? நான் கூப்புட்டும் வராத உனக்கு எதுக்குடி செல்லு?". - குடித்திருக்கிறான் என்பது அவன் கேள்விக் கணைகளிலேயே தெரிந்தது.
அப்பெண்ணின் சோகம்... அய்யோ..வர்ணிக்க முடியாது..
வாடிக்கையாளார்களின் கேவலப்பார்வை..!
வியாபாரம் அடுத்தக் கடைக்கு இடம்பெயர்ந்த் வேதனை..!
இந்த நிகழ்வின் எதிர்கால வினை! - என கவலையான உணர்வுகள் அவளை ஆட்கொண்டதும்..
"போ... நாளைக்குப் பேசிக்கலாம்.."
"ஏன் இபடி உசிரோடக் கொல்றே?" - என்று உதடு துடித்து சன்னமான குரலில் தலை குனிந்தவாறு அழுகையை விழுங்குவதும்..
அவளின் நிலைகண்டு சத்தியமாய் நானும் என்னையறியாமல் விம்மிவிட்டேன்.
இறுதியில் அவள் தலைமுடியைப் பிடித்து உலுக்கி அவளுடைய செல்போனையும் உடைத்து...
"தேவ்டியா.. சாவடிச்சுடுவேன்" என் உறுமுவிட்டு அகன்றான்.
இதற்கு மேலா அவள் சாகப்போகிறாள்? இன்னொறு முறை!
இந் நிகழ்ச்சிக்கு பின்னான இரவு முழுவதும் நான் கோபத்திலியே கொதித்தவாறே இருந்தேன்.
எதைச் செய்யலாம்...
சரியான உடலுறவைத் தராத அவள் கணவனின் ஆண்குறியை அறுத்து வீசுவதா?
இல்லை..
சரியான உடலுறவைத் தந்துவிட்ட திமிரில்.. ஒரு பெண்ணின் மனதில் அமிலம் எறியும் அந்தக் கணக்கில் வராத கணவனின் ஆண்குறியை விரையோடு சேர்த்து அறுத்து வீசுவதா?..
skip to main |
skip to sidebar
இதழ்கள்
- கட்டுரைகள் (5)
- சினிமா பார்வை (1)
- தெருவோர குறிப்புகள் (3)

